கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.  சங்கீதங்கள் 126:5

அறுவடையில் அக்களிப்பு

' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' யோவான் நற்செய்தி 6:29

 

உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன் ' என்றார். யோவான் நற்செய்தி 16:33 

 

ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. மத்தேயு நற்செய்தி 13:8

 

நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்: நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4:7-8

 

நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். யோவான் நற்செய்தி 14:3

 

பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: ″ இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்″ என எழுது என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்: ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும் என்று கூறினார். திருவெளிப்பாடு 14:13

Write a comment

Comments: 1
  • #1

    Joe (Wednesday, 23 November 2016 21:35)

    God bless ur ministry