ஞானமுள்ள ஆலோசனை
பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, "இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர். எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர். உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்" என்றான். (ஆதியாகமம் 41:39-40).
மேலும், அரசன் தானியேலை நோக்கி, நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்: அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்: அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்த வல்லவர். இது உண்மையிலும் உண்மை: ஏனெனில் உம்மால் மட்டுமே இம்மறைபொருளை விளக்கிக் கூறமுடிந்தது என்றான். (தானியேல் 2:47).
அவர் அரசரை நோக்கிக் கூறியது: உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன. (1 அரசர்கள் 10:6-7).
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:13)
Write a comment