உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன் என்று கடவுளே கூறியிருக்கிறார். எபிரேயர் 13:5

மன நிறைவு தேவை

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. சங்கீதம் 23:1

 

எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்: வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். பிலிப்பிய 4:12

 

 நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.. . . தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து. அப்போஸ்தலர் பணி 4:32,34

Write a comment

Comments: 0