விட்டு விலகாத அன்பு
வலிமைபெறு: துணிவுகொள்: அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே: ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்: உன்னைக் கைவிடவும் மாட்டார். உபாகமம் 31:6
பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். எசாயா 49:15
யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்: நீ என் ஊழியன்: நான் உன்னை உருவாக்கினேன்: நீ தான் என் அடியான்: இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன். எசாயா 44:21
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார். சங்கீதம் 27:10
Write a comment