உள்ளார்ந்த அழகு
ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், "அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்றார். 1 சாமுவேல் 16:7
எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும். நீதிமொழிகள் 31:30
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ' இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் ' என்று அவரைக் குறித்துக் கூறினார். யோவான் 1:47
நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, தயவுசெய்து இங்கே அமருங்கள் என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, அங்கே போய் நில் என்றோ அல்லது என் கால்பக்கம் தரையில் உட்கார் என்றோ சொல்கிறீர்கள். யாக்கோபு 2:3
Write a comment