இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை. நீதிமொழிகள் 16:24

நலம் தரும் வார்த்தை

வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே: வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர். நீதிமொழிகள் 18:21

 

கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். எபேசியர் 4:29

 

என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். சங்கீதம் 19:14

Write a comment

Comments: 0