'ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'  மத்தேயு 8:2

உடல் நலம் விரும்பப்படுகிறது

‘ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்.’ யாத்திராகமம் 15:26

 

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். மத்தேயு 9:35

 

இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. மத்தேயு 8:3

 

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்.. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். மாற்கு 16:17-18

 

பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்:எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர். அப்போஸ்தலர் 5:15-16

Write a comment

Comments: 0