மாறாத அன்பு
இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள். எரேமியா 18:6
ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே: அவர்களைக் கையிலேந்தியதும் நானே: ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். ஒசேயா11:3
பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்: அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்: அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். ஒசேயா 11:4
இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்: நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஒசேயா 14:8
Write a comment