தேவையான செயல்பாடு
அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது. 1 சாமுவேல் 1:11
ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார், நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்று சொல்லி, அவர் அவனுக்குச் சாமுவேல் என்று பெயரிட்டார். 1 சாமுவேல் 1:19-20
ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:8
இயேசு அவரைப் பார்த்து, ' உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ' ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ' என்றார்.இயேசு அவரிடம், ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
மாற்கு 10:51-52
Write a comment