யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். யோபு 42:10

நண்பர்களை ஆசீர்வதிப்போம்

உன் பழைய நண்பர்களைக் கைவிடாதே: புதிய நண்பர்கள் அவர்களுக்கு இணையாகமாட்டார்கள்: நட்பு மதுவைப் போன்றது. நாள் ஆக ஆகத்தான் அதன் சுவை அதிகரிக்கும். சீராக் 9:10

 

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. யோவான் 15:13

 

உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான்  15:15

 

தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். 1 சாமுவேல் 18:1

 

யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார்.  யோபு 42:10

 

நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ்விக்கும்: நண்பர்களின் கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.  நீதிமொழிகள் 27:9

Write a comment

Comments: 0