நண்பர்களை ஆசீர்வதிப்போம்
உன் பழைய நண்பர்களைக் கைவிடாதே: புதிய நண்பர்கள் அவர்களுக்கு இணையாகமாட்டார்கள்: நட்பு மதுவைப் போன்றது. நாள் ஆக ஆகத்தான் அதன் சுவை அதிகரிக்கும். சீராக் 9:10
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. யோவான் 15:13
உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15:15
தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். 1 சாமுவேல் 18:1
யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். யோபு 42:10
நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ்விக்கும்: நண்பர்களின் கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும். நீதிமொழிகள் 27:9
Write a comment