தைரியம் பரிந்துரைக்கப்படுகிறது
கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். 2 திமொ1:7
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். எசாயா 41:10
என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. சங்கீதம் 94:19
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்." யோசுவா 1:9
ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார். மாற்கு 6:50
Write a comment