பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில். சங்கீதம் 127:3

அவர்களை பாதுகாப்போம்

பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில். இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர். அவற்றால் தம் அம்பறாத் தூணியை நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்; நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது, அவர் இகழ்ச்சியடையமாட்டார்.  சங்கீதம் 127:3-5

 

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:10

 

அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, 'விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: ' நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு 18:1-3

Write a comment

Comments: 1
  • #1

    பட்டாபிராமன் (Sunday, 18 February 2018 02:51)

    ஆண்டவர் எண்ணை அருளூம்