யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை கேட்டேன். அதற்கு, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் என்றேன். எசாயா 6:8

தேர்ந்து கொள்ளப்பட்டப் பாத்திரம்

மேலும் யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் என்றேன். எசாயா 6:8

 

எனவே இப்போதே போ: இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன். மோசே கடவுளிடம், ″ ″ பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?″ ″ என்றார். அப்போது கடவுள், ″ ″ நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே″ ″என்றுரைத்தார். யாத்திராகமம் 3:10-12

 

சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார். லூக்கா 5:10

Write a comment

Comments: 0