ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. Ps 92:1

அவரை மேலாக துதிப்போம்

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.  காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்  பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.  Ps 92:1-3

 

அப்படியானால் சகோதர சகோதரிகளே, செய்ய வேண்டியது என்ன? நீங்கள் கூடிவரும்போது ஒருவர் திருப்பாடலைப் பாடலாம்: ஒருவர் கற்றுக் கொடுக்கலாம்: ஒருவர் திருவெளிப்பாடுகளை எடுத்துரைக்கலாம்: ஒருவர் பரவசப்பேச்சு பேசலாம்: ஒருவர் அதை விளக்கிக் கூறலாம். இவை அனைத்தும் திருச்சபையைக் கட்டியெழுப்பும் வகையில் நடைபெற வேண்டும். 1 Cor 14:26

 

உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். Eph 5:19

Write a comment

Comments: 0