வல்லமை அவர் அருளுவார்
ஆனால் அவர் என்னிடம், என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். 2 கொரிந்தியர் 12:9
அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக! எபேசியர் 3:16
மேலும் அவர், மிகுந்த அன்புக்குரியவனே! அஞ்சாதே: உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு துணிவாயிரு என்றார். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் துணிவு உண்டாகி, என் தலைவர் பேசட்டும்: ஏனெனில், நீர் எனக்கு வலுவூட்டினீர் என்றேன். தானியேல் 10:19