'கடவுள் இல்லை' என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர். சங்கீதம் 14:1

அறிவின் மெய்யான தரம்

'கடவுள் இல்லை' என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்; நல்லது செய்வார் எவருமே இல்லை. சங்கீதம் 14:1

 

ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். சங்கீதம் 14:2

 

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு. நீதிமொழிகள் 9:10