கொடுத்தலின் அதி மேன்மை
ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்: அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார். நீதிமொழிகள் 19:17
நீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே: ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார். உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு: சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு: ஆனால் தருமம் செய்யத் தயங்காதே. இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய். தோபித்து 4:7-9
எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்: தருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும். நன்மை செய்தோர்க்கே நன்மை செய்வோர் தங்களது எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்: தங்களது வீழ்ச்சிகாலத்தில் அவர்கள் உதவி பெறுவர். சீராக் 3:30-31