மெய்யான தேவ ஆசீர்
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர். சங்கீதம் 125:1
நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்: அமைதியின் இல்லமாகவும், பெயர்க்கப்படாத முளைகளும் அறுபடாத கயிறுகளும் கொண்ட அசைக்க முடியாத கூடாரமாகவும் எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும். எசாயா 33:20
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். லூக்கா 1:54-55