ஆசீர்வாதமாய் வரும் சுகம்
ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி ஓடுவீர்கள். மலாக்கி 4:2
நான் உனக்கு நலம் அளிப்பேன்: உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், தள்ளப்பட்டவள் என்று உன்னை அழைத்தார்கள்: இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர், என்றார்கள். எரேமியா 30:17
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். சங்கீதம் 103:2-3