அவர் தயவை நினைவுகொள்
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! சங்கீதம் 103:2
மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார் என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னொடு இருப்பார் என்றார். 1 சாமுவேல் 17:37
பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். 1 சாமுவேல் 17:48-50