நாம் அவருக்கு சொந்தமானவர்கள்
ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்; - இதை அறிந்துகொள்ளுங்கள். சங்கீதம் 4:3
கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் ஆண்டவர் தம்முடையோரை அறிவார் என்றும், ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. 2 திமொத்தே 2:19
யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ எனக்கு உரியவன். எசாயா 43:1