உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! எசாயா 48:17

வழிகாட்டல் அவசியம் தேவை

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! எசாயா 48:17

 

நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். சங்கீதம் 32:8

 

உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். சங்கீதம் 143:8