அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். லூக்கா 3:10

உண்மையான தீர்வுகள் வழங்கப்பட்டன

அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார். லூக்கா 3:11 

 

வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர். அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார். லூக்கா 3:12-13

 

படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார். லூக்கா 3:14