பார்த்துக்கொள்ளும் நம் தேவன்
எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு 'யாவேயிரே' என்று பெயரிட்டார். ஆதலால்தான் 'மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்' என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆதியாகமம் 22:14
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! சங்கீதம் 31:19
தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை. எசாயா 64:4