மெய்யான வெளிப்படுதலை நாடுவோம்
அவர் கூறியது: கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழத்தப்படுவதாக! ஏனெனில், ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன! காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே! அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே! ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே! அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே! ஆழ்ந்த மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே! இருளில் உள்ளதை அறிபவர் அவரே! ஒளியும் வாழ்வது அவருடனே! தானியேல் 2:20-22