ஜெபம் தேவனை திருப்திப்படுத்தும்
செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர். அவர் இறைப்பற்றுள்ளவர்: தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்: மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்: இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர். ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில் அவர் ஒரு காட்சி கண்டார். அதில் கடவுளுடைய தூதர் அவரிடம் வந்து கொர்னேலியு என்று அழைப்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் வானதூதரை உற்றுப்பார்த்து, ஆண்டவரே, என்ன? என்று அச்சத்தோடு கேட்டார். அதற்குத் தூதர், உமது வேண்டல்களும் இரக்கச் செயல்களும் கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன: அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார். அப்போஸ்தலர் 10:1-4