அவருக்காய் தாகம் கொள்வோம்
ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்: அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்: ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்: இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்: பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்: பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். எசாயா 41:17-18