குற்றமும் கபடுமற்றவர்களாய்க்கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்: உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். பிலிப்பிர் 2:15

ஒளியாய் இருக்க அழைப்பு

அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்ததலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க்கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்: உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். பிலிப்பிர் 2:15

 

 மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானேஉலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும்ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிறஒளியைப் பெறுவான்” என்றார். யோவான் 8:12

 

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அதுவீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவைமகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள்முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:14-16