முழுமையாய் ஆயத்தமாகும் பாத்திரங்கள்
எந்த ஒன்றையும் உருவாக்குவது என்றால், அதற்கென்று ஒரு நோக்கமும், வழிமுறையும் இருக்கும். மனிதர்களின் காரியத்தில் இது சற்று கடினமானதாகவே இருக்கும், அவர்கள் ஒரு தனிப்பட்ட சிறப்புப் பணிக்காக உருவமைக்கப்படும்பொழுது. எவருமே தாங்கள் முற்றிலும் செம்மையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது, எனவே சீர்படுத்தப்பட வேண்டியவர்களே. நம் வாழ்வு சூழலில் தேவன் தனது வார்த்தையைப் பயன்படுத்தி, ஒரு குயவன் கலத்தை வனைந்து, நெருப்பிலிட்டு மெருகூட்டுவது போல் சீரமைக்கிறார், அது சற்று கடினமாகவேத் தோன்றும். பவுல் கூறும் போது; “மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.” (2 தீமோத்தேயு 3:16-17) என்கிறார். ஒன்றை நாம் தீர்க்கமாக மனதில் கொள்ள வேண்டும், என்னவென்றால் நம்மேல் கொண்ட மிகுந்த அன்பினாலே தான், தேவன் நம்மை கவனத்தோடு ஆயத்தமாக்குகிறார்; “ஒருவன் தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பதுபோல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கும் கற்றுக்கொடுத்தார் என்பதை உங்கள் உள்ளத்தில் உணர்வீர்களாக.” (உபாகமம் 8:5) தேவனின் மேற்பார்வையில் நிகழும் இந்த உருவாக்கத்தை எண்ணி பெருமைப்படுவோம், அவர் நமக்கென ஏற்பாடு செய்துள்ள யுத்தத்தில் வெற்றி கொள்வோம்.
அப்பா, எங்களை தேர்ந்துகொண்டு செம்மையாய் உருவாக்குவதற்காக நன்றி கூறுகின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே இந்த ஆயத்தமாக்கலின் போது உடனிருப்பாராக, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.