தாழ்ச்சி மிகுந்த ஆரோக்கியமானது
நுட்பமாய் சோதிக்கிற கருவிகளைப் பயன்படுத்தி, நம் உடலின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்தறியலாம். அதேபோல தேவ சமூகத்தில் நாம் கடந்து செல்லும் போது, நமது ஆவி மற்றும் ஆன்மாவின் நலத்தின் அளவையும் தெரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் தேவனின் உயிருள்ள வார்த்தை ஊடுருவ இயலாத நம் வாழ்வின் எல்லா பாகங்களையும் கடந்து சென்று பரிசோதிக்கின்றது. "தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது." (எபிரேயர் 4:12) தனக்குத் தானே சான்றளித்த பரிசேயனின் ஆய்வு இப்படிச்சொன்னது; திருடுகிறவனல்ல, ஏமாற்றுகிறவனல்ல, ஒழுக்கக் கேடுடையவனல்ல, வாரத்திலிருமுறை நோன்பிருப்பவன், பத்திலொன்று காணிக்கை தரும் உத்தமன் என்று. ஆனால் தேவனின் சான்றோ பாவி என அடையாளப்படுத்தப்பட்ட மனிதனின் சார்பில் இருந்தது; “இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.” (லூக்கா 18:14) ஏனென்றால் இந்த மனிதன் தான் பாவியென உணர்ந்து, தேவனின் சமூகத்தில் தன்னைத் தாழ்த்திக்கொண்டவன். நாமும் கூடத் தாழ்ச்சியை எண்பித்துத் தகுதி உள்ளவர்களாவோம்.
அப்பா, பாவிகள் எங்களை ஏற்றுக்கொண்டு, மனமிரங்கி மன்னிப்பளிப்பதற்க்காக நன்றி கூறுகின்றோம். உம பரிசுத்த ஆவியார் தாமே எங்களை உம் இரக்கத்தை நாடக் கற்றுத்தருவாராக, இயேசுவின் மிகவும் இரக்கமுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.