நிலையானதை என்றும் நாடுவோம்
வரலாற்றின் பக்கங்களும், தொல்லியல் ஆய்வுகளும் மாய்ந்து போன மனித பெருமைகளை இன்னும் எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. எளிதில் மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும் அழகு, அறிவு, செல்வம், புகழ், அதிகாரம் எல்லாம் நீராவி போன்று விரைவில் அற்பமாய் மறைந்து போவதே. எகிப்திய அடிமைத்தனத்தினின்று விடுவித்த பின்பும் நன்றியில்லாமல், அற்பமான உணவை மட்டுமே எண்ணி முணுமுணுத்தது தேவனுக்கு கவலையையே ஏற்படுத்தியது; ஜனங்கள் அந்த இறைச்சியை உண்ண ஆரம்பித்தனர். ஆனால் கர்த்தரோ பெருங்கோபம் கொண்டார். அவர்கள் வாயில் இறைச்சி இருக்கும்போதே, அவற்றை அவர்கள் தின்று முடிக்கும் முன்னரே அவர்கள் நோயுறும்படி கர்த்தர் செய்தார். அதனால் பலர் மரித்துப்போனார்கள். அங்கேயே புதைக்கப்பட்டனர். எண்ணாகமம் 11:33 வாழ்வில் அழிந்துபோகிற,அற்பமாவற்றையே மட்டும் எண்ணிக்கொண்டிராமல், நிலையானதை, நிரந்தரமானதை நாட வேண்டும். பேதுரு அப்போஸ்தலன் தீர்க்கதரிசியின் வாக்கை நினைவூட்டுகிறான் ; வேதவாக்கியங்கள், “எல்லா மனிதர்களும் புல்லைப் போன்றவர்கள். புல்லின் மலரைப் போன்றே அவர்களின் மகிமையும் காணப்படும். புல் உலர்ந்து போகிறது. பூக்கள் உதிர்கின்றன. ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது” என்று சொல்கிறது. இந்த வார்த்தையே உங்களுக்குச் சொல்லப்பட்டது. 1 பேதுரு 1:24-25 உடலையும், ஆன்மாவையும், ஆவியையும் என்றுமே வளப்படுத்தி, எப்போதும் நிலைத்திருக்கும் தேவனின் அரசில் இட்டுச்செல்லும் நற்செய்தியின் போதனையை நாடுவோம்.
அப்பா, வாழ்வளிக்கும் நிலையான உம் வார்த்தையை நாளும் தருவதற்காக நன்றி கூறுகின்றோம். உம பரிசுத்த ஆவியார் தாமே அறிவிக்கப்படும் நற்செய்தியின் செழுமையை உணரச்செய்வாராக, இயேசுவின் நிலையான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.