கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், நீங்கள் அறியுமா

அகக்கண்கள் ஒளி பெறட்டும்

காண்பதற்கென்று இருப்பவற்றை எல்லாராலும் காண முடியாது, கண்கள், பார்வைத்திறன் எல்லாமும் இருந்தாலும். பல நேரங்களில், நம் மனஉணர்வுகள் நாம் காண்பதற்குத் தடையாக உள்ளன. விசுவாசம், நம்பிக்கை போன்றவை, பிறரால் காண முடியாதவற்றை ஒருவன் காண உதவி செய்யும். கிறிஸ்துவைச் சந்தித்த நிகழ்வின் போது, பவுல் தன் பார்க்கும் திறனை இழந்தான், எனினும் மீண்டும் பெற்றான். அதைவிட மேலாக அவன் அகக்கண் திறக்கப்பட்ட அனுபவத்தை அடைந்தான். அந்த மாபெரும் பாக்கியம் விசுவாசிகள் நமக்கும் கிடைக்கப்பெற வேண்டுமென விரும்பி செபிக்கிறான்; கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும்,  நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! எபேசியர் 1:18 எம்மாவு வழியே கடந்து சென்ற சீடர்களின் வாழ்வில் இந்த அனுபவம் தெளிவாக வெளிப்படுகிறது. இயேசு அவர்கள் அகஒளி பெற உதவினார்; இயேசுவை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து ஏதோ ஒன்றால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள்.....  அப்போது அம்மனிதர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார். லூக்கா 24:16, 31 நாமும் கூட இந்த அகவொளி பெற்றுப் புதிய பார்வை கொள்ள, தேவன் தாமே நமக்கும் உதவி செய்வாராக.

 

அப்பா, உலகம் காணக்கூடத்தைக் காணும் அகவொளி என்னும் மேலான கொடைக்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே உள்ளொளி பெற்று நீர் நியமித்திருப்பவற்றைக் கண்டு, உம்மைத் துதிக்கச் செய்வாராக, இயேசுவின் மிக அற்புதமான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.