தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார். 1 பேதுரு

அவரின் பிரத்தியேகமான தூதுவர்கள்

எந்தவொரு சிறப்புப் பணி, அல்லது பொறுப்பு என்றாலும், அது பெருமை, அதிகாரம் மற்றும் மாண்பு கொண்டது என்றாலும், .. ஏராளமான கடமைகளையும் உள்ளடக்கியதே. தேவனால், அவரது தூதுவர்களாக, இவ்வுலகில் செயல்பட அழைக்கப்பட்ட நாம், கொண்டிருக்கவேண்டிய மனநிலையைப் பற்றி எழுதுகையில், பேதுரு; ஆனால் நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நீங்கள் அரசரின் ஆசாரியர். நீங்கள் ஒரு பரிசுத்த தேசம். நீங்கள் தேவனுக்குச் சொந்தமான மக்கள். தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார். 1 பேதுரு 2:9 என்றார். எனினும் உடன்தானே அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு கடிதமெழுதி, சூழ்ந்து வாழும் மற்ற மனிதர் நடுவே நாம்  செயல்படவேண்டிய பாங்கையும், பண்பயும், பற்றி அறிவுறுத்துகிறார்; தேவனிடம் நம்பிக்கையற்ற மக்கள் உங்களைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று இம்மக்கள் கூறக்கூடும். எனவே நல்வாழ்க்கை வாழுங்கள். அப்போது அவர்கள் உங்கள் நற்செய்கைகளைக் காண்பார்கள். அவர் வரும் நாளில் அவர்கள் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பார்கள். 1 பேதுரு 2:12 இருளினின்று நம்மை மீட்ட, நம் தேவனின் செயலைப் பறைசாற்றி, நம்மைச் சுற்றி வாழ்வோர் நடுவே தேவனின் அரசின் பண்புகளை செயலில் காட்டுவோம்.

 

அப்பா, உம் அரசின் தூதுவர்களாக எங்களை நியமித்திருப்பதற்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் எங்கள் உயர் அழைப்பையும், கடமைகளையும் எப்போதும்  உணர்த்திக்கொண்டிருப்பராக, இயேசுவின் மிக மேலான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.