கட்டளைகளுக்குப் பணிந்து நடப்போம்
கீழ்ப்படிதல் என்பது வாழ்வில் ஒருவன் நடக்கத்தேர்ந்தெடுக்கும் வழி. தேவனின் தீர்க்கமான கட்டளைகளைநிராகரித்ததன் விளைவு மிகவும் கடினமான ஓன்று, அதுதேவனோடு தங்கி வாழும் இன்ப வனத்தினின்று மனிதனைவெளியேறச்செய்தது. கிறிஸ்துவின் வாழ்வு முழுமையானக்கீழ்ப்படிதலுக்கு மிகச்சசிறந்த மாதிரியாக நமக்குத்தரப்படுகிறது.இந்த உவமையில், தந்தை சொன்னவார்த்தைகளுக்கான உடனடி பதில், உதாசீனம் மற்றும்எதிர்ப்பாக இருந்தபோதிலும், தொடந்து வந்த சிந்தனை மனவருத்தம் மற்றும் மனமாற்றமாய் இருந்தது; “அதற்கு அவன்,‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர்,அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் எனநினைத்தான். அவ்வாறே செய்தான். மத்தேயு 21:29முரணான வார்த்தைகளும், எதிரான செயல்களும் இயல்பானவழக்கமாக இருந்தாலும், கிறிஸ்துவின் கல்வி நம் சிந்தனை,மேலும் செயல்களையும் மீண்டும் சீராய்வு செய்து, பணிவின்பாதையில் நம்மை திரும்பச்செய்ய வேண்டும். பவுல்கிறிஸ்துவின் பணிவை எண்ணி வியந்து கூறுகையில்; மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்புகீழ்ப்படிந்தவராக இருந்தார். மரணம் வரைக்கும் அவர்பணிவுள்ளவராக இருந்தார். முடிவில் சிலுவையிலேஇறந்தார். பிலிப்பியர் 2:8 கல்வாரியில் அவர் தொங்கிய மரம்,முதல் பெற்றோரின் மீறுதலை, விலக்கப்பட்ட மரத்தின்கனியைப் புசித்ததை நினைவூட்டிப், பணிவின் பாதையில்நம்மை வழி நடத்தட்டும்.
அப்பா, பணிவின் பாதையில் வழி நடக்க அழைப்பதற்காகநன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே நாங்கள்மீறுகையில், அறிவூட்டி நெறிப்படுத்துவாராக. இயேசுவின்மகிமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.