அவரது சித்தம் நிறைவேற்றுவோம்
தேவனின் சித்தத்தை அறிவதும், அதன்படி நடப்பதும் சீடத்துவ வாழ்விலுள்ளமிகப்பெரியச் சவால் என்றே சொல்லலாம். செபிக்கக் கற்றுக்கொடுத்தபோதேதேவனின் சித்தத்தை முதன்மைப்படுத்த வேண்டியதைத் தெளிவுறுத்தினார்; "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." மத்தேயு 6:10 இந்தபூமியிலே அவர் நம்மைப் போல மனிதராக வாழ்ந்த போது, தாங்கமுடியாதபாடுகளையும், வேதனையையும் எதிர்கொள்ள வேண்டிய அந்தவேளையிலுங்கூட, தன விருப்பம் அலல, தேவ சித்தமே என வலியுறுத்திமன்றாடினார்; சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியேஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26:39 இந்த மீட்பரின்வழியில் சென்று, அவர் அரசில் பங்கு பெற வேண்டுமானால், அவரின் குடும்பஉறுப்பினர் ஆக வேண்டுமென்றால், தேவசித்ததை நிறைவேற்ற வேண்டியதுஅவசியமென்கிறார்; பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய்இருக்கிறான் என்றார். மத்தேயு 12:50 தேவ சித்தத்தை நிறைவேற்ற பெரும்ஆவல் கொள்வோம், அவரது அரசின் கிரீடத்தைப் பெருமையுடன் பரிசாய்ப்பெறுவோம்.
அப்பா, உம் சித்தத்தைச் செய்ய எங்களை அழைப்பதற்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே சுய சித்தத்தை அர்ப்பணித்து, உம் சித்தம் செய்யக்கற்றுத்தந்து நடத்துவாராக, இயேசுவின் மகிமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.