நல்ல கனிகளை உற்பத்தியாக்குவோம்
நாம் அருந்தி மகிழும் கனிகளெல்லாமே, நாம் அறியாத யாரோ விளைவித்தவையே. சுவையான இந்த கனிகளை நம் தலைமுறையினரும் சுவைக்க, அதன் விதைகளை நாம் பயிரிட வேண்டும், நீரூற்ற வேண்டும், உரமிட்டுக் கனிகளின் காலத்தை எதிர்பார்த்து, மகிழ்வுடன் காத்திருக்க வேண்டும். நாம் வாழும் பகுதியில், பவுல் பட்டியலிடும், “அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, கருணை, நன்மை, விசுவாசம், நற்பண்பு, தன்னடக்கம்” (கலாத்தியர் 5:22-23) என்னும் ஆவியாரின் உருவாக்கத்தில் வளரும் கனிகள் காணப்படவில்லையென்றால் அவைகளைத் தன்னலமின்றி நாம் தந்து, அதை பிறரும் உருவாக்கச் செய்வது நமது கடமையே என மீண்டும் நினைவூட்டுகிறார்; “நன்மைசெய்வதில் மனம்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன்வருவோம்.” (கலாத்தியர் 6:9-10) வாழ்வில் தேவன் நம்மில் உருவாக்கும் சுவையான கனியை, பிறரும் சுவைக்க, அதிலும் சிறப்பாக, விசுவாசம் கொண்ட நம் சுற்றத்தார் பெற தாராளமாய் விதைப்போம், பகிர்ந்தளிப்போம்.
அப்பா, நற்கனிகளை விதைக்க அழைப்பதற்காக நன்றி கூறுகின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே எங்களில் அது உருவாகி, அதை பிறருக்கும் பகிர்ந்தளிக்க அருளுவாராக, இயேசுவின் அற்புதமான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.