நாம் வெற்றி கொண்டவர்கள்
கடவுளின் நூல் நம்மைப்பற்றிக் கூறுகையில், நம்மை மேற்கொண்டவர்கள், வெற்றியாளர்கள் என்று தான் குறிப்பிடுகிறது. ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை, அது தான் நம் அடையாளம், அங்கீகாரம். நம்மைத் தோற்கடிக்க எண்ணுகிற அலகை, இதற்கு நேர்மாறான மனநிலையை நமக்குள் ஏற்படுத்த விழைகிறான். நாமோ, என்றுமே நம் பலத்தைச் சார்ந்திராமல், நமக்குள் தங்கி வாழும் அவரது வல்லமையுள்ள ஆவியாரைச் சார்ந்து செயல் படவேண்டும். பவுல் எழுதுகையில்; நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார். 1 கொரி 3:16 என்ற அசைக்க இயலாத விசுவாசத்தை நாம் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறான். நம் எதிரி நமக்குள் பயம், சந்தேகம், மற்றும் சலிப்பை ஏற்படுத்த முயலும் போதெல்லாம், வல்லமையுள்ள இந்த தேவ வார்த்தை என்ற வாளைக் கையாளவேண்டும்; எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். எனவே நீங்கள் அவர்களை வெற்றிகொண்டிருக்கிறீர்கள். ஏன்? உங்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர். 1 யோவான் 4:4 அப்பொழுது, நம் பலகீனமல்ல, மாறாக நமக்குள் இருக்கும் நம் பெரியவரான ஆவியாரின் வல்லமை,எதிரியை ஓடச்செய்து, நம்மை மேற்கொண்டவர்களாக்கும்.
அப்பா, எங்களில் தங்கும் உம் வல்லமையின் ஆவியாருக்காக நன்றி கூறுகின்றோம். உன் பரிசுத்த ஆவியார் தாமே, நாங்கள் எப்போதும் மேற்கொள்பவர்கள் என்பதை நாங்கள் காணச்செய்வாராக, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.