ஆகவே கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடித்து, இயேசுவின்மீது விசுவாசம் கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை. திருவெளிப்பாடு 14:12

மனவுறுதியை ஒருபோதும் கைநெகிழாதிரு

விசுவாச வாழ்வு என்பது ஒரு யுத்தத்துக்கு ஒப்பானது. அதிலே மனவுறுதியைப் பற்றிக்கொண்டிருப்பது மிகமிக அவசியமானது. போராட்டத்தின் ஓட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய சோதனை என்னவென்றால், மனவுறுதியைக் கைவிட்டுத் தளர்ந்து போவது, அல்லது சரணடைவது தான். தேவனின் கட்டளைகளைக் கைக்கொண்டு, இயேசுவின் மேல் விசுவாசம் உள்ள ஒருவன், பொறுமையுடன், திட மனத்தைக் காத்துக்கொண்டு, விடாமல் நிலைத்திருப்பது இன்றியமையாதது; “ஆகவே கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடித்து, இயேசுவின்மீது விசுவாசம் கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை.” (திருவெளிப்பாடு 14:12) நம் எதிரியின் தலையாய நோக்கமெல்லாம், நம் மனஉறுதியைக் குலைப்பது தான். எனவே தான் நம் துணிவு என்பதே வீழ்த்தமுடியாத மனஉறுதியில் நிலைத்திருப்பது தான்.யாக்கோபு ஊக்கப்படுத்துகையில் கூறுகிறான்; “சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான்.” (யாக்கோபு 1:12)

தேவன் நம் சோதனையின் வேளையில், பாடுகளின் நடுவே எப்போதும் வீழாத, நிலைத்த மன உறுதியை தர வேண்டுவோம்.

 

அப்பா, பொறுமையோடு, மனஉறுதியில் நிலைநிற்க அழைப்பதற்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே மனத்துணிவு தந்து நாங்கள் நிற்கச் செய்வாராக, இயேசுவின் மிக வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.