கடந்துச் செல்ல கற்றுக்கொள்
தேவன் மேலுள்ள அன்பினாலும், அவரது திட்டத்தாலும் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வை நாம் நடத்தினாலும்,நாம் விரும்புகின்ற சமாதானமான சூழமைவு அமையுமென்று ஒருபோதும் உத்தரவாதமில்லை. தன் சகோதரர்களுக்கு எதிராக எண்ணவோ, செயல்படவோ இல்லயென்றாலுங் கூட, தந்தை தன் மேல் கொண்ட மிகுந்த அன்பினாலும், அலங்காரமான அங்கியாலும், தன சொந்த சகோதரர்களாலே அவர்களின் பொறாமையால் பகைக்கப்பட்டான்: "யோசேப்பு பிறக்கும்போது இஸ்ரவேலுக்கு மிக முதிய வயது. எனவே அவன் மற்ற மகன்களைவிட யோசேப்பைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கென்று ஒரு தனி அங்கியைக் கொடுத்திருந்தான். அது மிக நீளமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. யோசேப்பின் சகோதரர்கள், தங்கள் தந்தை தங்களைவிட யோசேப்பை அதிகமாக நேசிப்பதாக உணர்ந்தனர். இதனால் அவர்கள் அவனை வெறுத்தனர். எனவே அவர்கள் அவனோடு அன்பாகப் பேசுவதில்லை."( ஆதியாகமம் 37:3-4) பலவேளைகளில் நமது அழைப்பு, சிறப்பு நிலை மற்றும் நாம் பெற்றுள்ள கொடைகள் கூடச் எதிர்மறையான கசப்புகளை நம்முன் கொண்டுவரும், அவைகளை நாம் கடந்து செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் மேல் மோத வரும் பொறாமை, பகை எல்லாம், நம்மை புன்னகைக்கச் செய்து, நம் ஆசீர்வாத நிலையை எண்ணி மகிழச்செய்ய வேண்டும். எதிர்மறையானவற்றை நிராகரித்துக் கடந்து செல்லக் கற்றுக்கொள்வோம், தேவனை இன்னும் அதிகமாய்த் துதிப்போம்.
அப்பா, எங்கள் மேல் நீர் கொண்டுள்ள மேலான அன்புக்காக உம்மைப் போற்றுகின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே எங்கள் கொடைகளை எண்ணி, இன்னும் அதிகமாய் உம்மைத் துதிக்கச் செய்வாராக. இயேசுவின் அன்பு நிறைந்த நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.