ஒருவருக்கொருவர் தூண்டுகோலாய் இருப்போம்
பந்தயத்தின் இலக்குக் கோட்டை நெருங்க நெருங்க ஓடுவதென்பது மெய்யாகவே மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனென்றால் அந்த வேளையில் தான் உடலின் களைப்பும், மனதின் ஐயப்பாடும் மேலோங்கும். இந்தத் தருணமே, அணியின் சக பந்தயவீரன் என்ற நிலையில், பிறரை உற்சாகப்படுத்தித், தூண்டுவதென்பது மிகவும் இன்றியமையாதது. இதை உணர்ந்தே எழுதி அறிவுறுத்துகிறார்: "அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக." எபிரேயர் 10:24 மேலும், கூறும்போது அதை எப்படியெல்லாம் நிறைவேற்றலாம் என தொடர்ந்து எழுதுகையில்: "சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. "நாம் அவ்வாறு செய்யலாகாது: ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்: எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்." எபிரேயர் 10:25 என்கிறார். தேவன் தாமே, நம் பார்வையை தெளிவாக்கி, அவர் வருகையின் நெருக்கத்தைக், காலத்தால் உணர்ந்து இந்த ஊக்கப்படுத்தும் பணியை இன்னும் உத்வேகத்துடன் செய்து, நம்மைத் தூண்டுகோலாய் விளங்கச் செய்வாராக.
அப்பா, வெற்றிக் கோட்டை நாங்கள் நெருங்குகையில், எங்களைத் தூண்டி ஊக்குவிப்பதற்காக நன்றி சொல்கின்றோம். உம் பரிசுத்த ஆவியார் நாங்கள் பிறருக்குத் தூண்டுகோலாய்த் திகழ, தினமும் நினைவூட்டுவாராக. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.