நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்கு 10:15

குழந்தைகளின் மனநிலையை அணிந்திரு

நவீன யுகத்தில் நமக்கு சில அட்டைகள் வழங்கப்படுகின்றன, சில முக்கியமான இடங்களுக்குள் நுழைவதற்கு. அவற்றின் சங்கேத எழுத்துக்களோ, உருவமோ நமக்குப் புரியவில்லை என்றாலும் அதை வைத்துக்கொண்டு தான் அனுமதி பெற்றுக் கடந்து செல்ல முடிகிறது. குழந்தைகளின் மனநிலை. இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. நாம் எல்லோருமே இந்த மனநிலையோடே தான் இந்தப் பூமிக்குக் கடந்துவந்தோம்: “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார். பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.” மாற்கு 10:15-16 காலத்தின் ஓட்டத்தில் நம் இயல்பு நிலையை இழந்து, அல்லது மறந்து நிற்கின்றோம். நமக்குள் ஆழமாய் இருந்து ஒளிர்விடும் இந்த அற்புதப் பண்பு, புறத்தே தோன்றி சுடர்விட, நம் மேல் படிந்துள்ள அத்துணை மாசுகளையும் தேவனின் இரக்கத்தைப் பயன்படுத்தித் துடைத்துத் தூய்மை செய்வோம். தேவன் தாமே நமக்குள் பொறித்து வைத்துள்ள எளிமை, ஏற்றுக்கொள்ளும் தன்மை, நன்றியுணர்வு, உவகை, இன்னும் அக்களிப்பு மேலும் மிளிரச் செய்வாராக.

 

அப்பா, குழந்தையுள்ளம் தந்து தகுதிப்படுத்தியதற்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே இந்த அற்புதப் பண்பில் நிலைத்திருக்கச் செய்வாராக, இயேசுவின் நல்ல நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.