சமாதானம் நம்மையெல்லாம் ஆட்கொள்ளட்டும்
கணினி யுகத்தில் வாழும் நமக்கு நம் ஒட்டுமொத்த வாழ்வையும் ஆளுகை செய்ய வேண்டியது என்னவென்று உணர்ந்து கொள்வது சுலபமாக இருக்க வேண்டும். நம்மை ஆளுகை செய்வது எது எனத் தீர்மானம் செய்வது, ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் அவசியம் மற்றும் தேவை. பவுல் கடிதமெழுதி நினைவூட்டுகிறான்: "கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள்." (கொலோசெயர் 3:15) இந்த ஆளுகையில் நாம் கடந்து செல்ல வேண்டுமென்றால் இன்னுமொரு ஆலோசனையும் கூறி அறிவுறுத்துகிறான், அது நாம் அணிய வேண்டிய சீருடை பற்றியது: "இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது." (கொலோசெயர் 3:14) சமாதானம், இது காலத்தின் மிகப்பெரும் தேவை, நமக்கும் நாம் வாழும் இந்தப் பரந்த பூமிக்கும்.
அப்பா, சமாதானத்தை எங்களுக்குக் கொடையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். அன்பைக் சீருடையாக அணிந்து சமாதானத்தின் ஆட்சியில் நிலைத்திருப்போமாக, இயேசுவின் சமாதானம் தரும் நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.