நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். கொலோசெயர் 3:17

மிகவும் உற்சாகமாக வாழுங்கள்

தொடர்வண்டிகளில் சில பெட்டிகள் தனியாக நியமிக்கப் படுகின்றன, அவை உணவு பரிமாறவும் நல்ல சேவைக்கென்றும். ஆவிக்குரிய வாழ்வில் எதையும் அப்படித் தனித்து விலக்கலாகாது, அர்த்தம் என்னவென்றால் நம் செயல்கள் எல்லாவற்றிலுமே நாம் வெற்றிபெற நமக்குத் தரப்பட்டுள்ள நாமமும்,நன்றியும் நிறைந்திருக்க வேண்டுமென பவுல் இன்னுமொரு ஆலோசனை தந்து, நம்மைச் செயல் படவும், உற்சாகமாய் செயல் படவும் எல்லாவற்றிலுமே தேவன் நிறைந்திருக்க வேண்டுமென்கிறான் -- உண்பது, உறங்குவது, பணி செய்வது எல்லாவற்றிலுமே நம் தேவன் நிறைந்திருக்கட்டும்: “நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். பிதாவாகிய தேவனுக்கு இயேசுவின் மூலம் நன்றி செலுத்துங்கள்.” (கொலோசெயர் 3:17)

 

அப்பா, நாங்கள் வெற்றி பெறத் தரும் இந்த வழிமுறைக்காகவும் நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே எல்லாவற்றிலும்,இன்னும் ஊக்கமாய் நன்றியோடும், நாமத்தோடும் நடத்திச் செல்வாராக, இயேசுவின் வல்லமையான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.