மிகவும் எச்சரிக்கை தேவை
எல்லாத் தொழிலிலும் நுட்பமான காரியங்கள் உண்டு, அவைகளை அறிந்து, உணர்ந்து, பின்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். கைகளைக் கலப்பையில் வைத்து, உறுதியாய் பற்றிக் கொள்வது உழவனுக்கு மிகவும் அவசியமான பாதுகாப்பு எச்சரிக்கை விதிகளுள் முதன்மையான ஒன்று. தேவனின் பணியில் தன்னை உட்படுத்திக்கொள்பவன், தான் செல்ல வேண்டிய வயலில் மட்டும் சென்று, கலப்பையை மட்டுமே பற்றிக்கொண்டு நியமித்தவரின் உத்தரவுக்காக விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்: இயேசு, “ஒருவன் வயலை உழ ஆரம்பித்துப் பின்னோக்கி பார்த்தால் அவன் தேவனின் இராஜ்யத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்தாதவன் ஆவான்” என்றார். (லூக்கா 9:62) எந்த இடத்தில் தேவன் உன்னை நியமித்து உள்ளாரோ, அவரை நம்பி அவரின் கட்டளைகளைப் பெற்று பின்பற்றுவது நல்லதும், ஆசீர்வாதமானதாகவும் இருக்கும்.
அப்பா, உம் வயலில் எங்களை நியமித்ததற்காக நன்றி கூறுகிறோம். உம் ஆவியார் கலப்பையை உறுதியாய் பற்றிக்கொண்டு, உமது கட்டளைக்காகக் கவனமாகக் காத்திருக்கச் செய்வாராக. இயேசுவின் வல்ல நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.