எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். யோவான் 10:16

பெயரை அழைப்பதைக் கவனி

உயர்வான பணிக்கான நேர்காணலில் காத்திருப்பவன், பெயர் அழைக்கப்படுவதைக் கவனித்துப் புன்னகையோடு எழ வேண்டும். இந்தப் பணிக்கான தேர்வும், கடிதமும் ஏற்கனவே தயாரான நிலையில் உள்ளது. பெயர் அழைக்கப்படுவதைக் கூர்ந்து கவனி. அது நிச்சயமாய் உன் பெயர் தான். எந்த தூரத்தில் நீ இருந்தாலும், உன்னைத் தேர்ந்தவர் அழகாகச், சப்தமாக, அன்பொடே கூப்பிடப்போகிறார்:  "எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும்." (யோவான் 10:16) அவர் உன்னை மறக்கவில்லை, எங்கே நீ இருந்தாலும் அவருடன் பணியாற்ற, அந்த ஒரே மேய்ப்பனின், ஒரே மந்தைக்கு உன்னையும் அழைக்கிறார்.

 

அப்பா, தகுதியற்ற என் மேல் நீர் கொண்டுள்ள பேரன்புக்காக நன்றி. உம் ஆவியார் தாமே தப்பாமல் என் செவிகளைத் தூண்டிப் பதிலுடன் விரைந்து எழ உதவுவாராக, ஒரே மேய்ப்பராம் நல்ல இயேசுவின் நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.