ஆனால் அவர்களது இருதயங்கள் என்னை விட்டுத் தொலைவில் உள்ளன. ஏசாயா 29:13

தூரத்தைக் துல்லியமாக அறிந்திரு

துல்லிய கைபேசிகளையும், துல்லிய கடிகாரங்களையுமே கொண்டிருப்பதால் துல்லிய ஆவிக்குரிய வாழ்வையும் நடத்தலாம் என்பது ஒரு ஏமாற்றமே. சிறப்பு மருத்துவர் சிலவேளை நாம் விரும்பவில்லை என்றாலும், நமது நன்மைக்கே. நோயின் பெயரையும், பாதிப்பையும் அன்போடு சொல்லி எச்சரிக்கிறார்கள் தீர்க்கதரிசிகள் மருத்துவர் போன்றே  எச்சரிக்கிறார்கள்: "எனது ஆண்டவர், 'என்னை நேசிப்பதாக இந்த ஜனங்கள் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் வாயின் வார்த்தைகளால் என்னைப் பெருமைபடுத்துகிறார்கள். ஆனால் அவர்களது இருதயங்கள் என்னை விட்டுத் தொலைவில் உள்ளன. அவர்கள் எனக்குக் காட்டும் மரியாதையானது மனிதர்கள் உண்டாக்கிய சட்டங்களைத் தாங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு மட்டுமே இருந்தது.'"(ஏசாயா 29:13) தன் காலத்தில் இதையே இயேசு வலியுறுத்தி மேற்கோளிட்டார். பேதுரு நம் புறச்சூழலையும் கூறி தூரத்தைக் துல்லியமாக அறிந்திருக்க அறிவிப்பு கொடுக்கிறான்: "திருடன் வருவதைப் போன்று கர்த்தர் மீண்டும் வருகிற நாளும் ஆச்சரியமானதாக இருக்கும். மிகுந்த சத்தத்தோடு வானம் மறையும். வானிலுள்ள எல்லாப் பொருள்களும் நெருப்பால் அழிக்கப்படும். பூமியும் அதிலுள்ள மக்களும் அதிலுள்ள சகலமும் நெருப்பிலிடப்பட்டது போலாகும். நான் உங்களுக்குக் கூறியபடியே எல்லாப் பொருட்களும் அழியும். எனவே நீங்கள் எந்த வகையான மனிதர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனுக்கு சேவை செய்யவேண்டும்." (2 பேதுரு 3:10-11)

 

அப்பா, ஆவிக்குரிய வாழ்வின் ஏமாற்றங்களை எடுத்துரைத்து எச்சரிப்பதற்கு நன்றி. உம் ஆவியார் எளிமையான உமது ஊழியர்களின் குரலைக் கேட்க ஞானம் தருவராக. கனிவுள்ள இயேசுவின் நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.