அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். சங்கீதம் 23:3

பாதையும் மற்றும் தளமும்

சேர வேண்டிய இலக்குத் தெளிவு என்றாலும், புறப்படும் முன் தளம், மற்றும் ஓடு பாதையை மாற்றி நியமிக்க, நம்மை நியமித்தவர்களுக்கு உரிமையுண்டு. தேவ ஆவியார் நம் மேல் முழு அதிகாரம் கொண்டவர், எனவே அவரே பாதையை, தளத்தை முடிவு செய்வார், எப்போது வேண்டுமென்றாலும். தாவீதும் கூட, ஆம், அப்படியே என்கிறான்: "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்."  (சங்கீதம் 23:3) விரைவான ஓட்டத்தின் தளத்தை வந்தடையும் வரை, இடது வலது என வழிநடத்தி, அவர் சமமாக்கும் தளத்தில் இருந்து புறப்படலாம், அவரை நம்பி: "சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்: பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்: கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்: அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்: அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்: செப்புக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்." (ஏசாயா 45:1-2) முழுமையாக அவரை நம்பிப் புறப்படலாம், ஏனென்றால் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி காணச்செய்வார்.

 

அப்பா, தவறாமல் அறிவுறுத்தி, நெறிப்படுத்தும் உம் அன்புக்கு நன்றி. உம் ஆவியார் தரும் எல்லாக் கட்டளைகளையும் அவ்வப்போதே செம்மையாய்ப்  பின்பற்ற அவரே பணிவைத் தருவாயாக. இயேசுவின் அற்புத நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.