ஆனால் மோசே, “… இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்! நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்” என்றான். ய

அமைதியாக இருந்தாலே போதுமானதே

பல வித வேலைகளை, ஒருவரே ஒரே நேரத்தில் செய்வது மிகப்பெரியத் திறமை என நம்பச்செய்து, வேலை வாங்குவது இன்றைய காலத்தின் புதிய அடிமைத்தன யுத்தி. எந்த அடிமைத்தனத்தையும் தன் மக்கள் அனுபவிப்பதை தேவன் ஒருபோதும் நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார். தான் தேர்ந்து கொண்டுள்ள ஒரு மனிதனை மட்டுமே அனுப்பி எல்லா அடிமைத்தனத்தினின்றும் விடுவிப்பார்: "ஆனால் மோசே, ‘பயப்படாதீர்கள்! ஓடிப் போகாதீர்கள்! சும்மா இருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்! நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்’ என்றான்." (யாத்திராகமம் 14:13-14) நமக்கு அதில் தரப்படுகின்ற ஒரே வேலை என்னவென்றால், அமைதியாக தேவன் தாமே வல்லமையாய் செயலாற்றி விடுவிப்பதைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதுதான். மீண்டும் கூறுகின்றார் தாம் அனைத்தையும் நிறைவேற்றுவாராம், நாம் விசுவாசித்து அமைதியாக இருந்தாலே போதுமானதே.

 

அப்பா, உமது பிள்ளைகளை விடுதலை செய்யப் போவதற்காக நன்றி. உம் வல்லமையின் ஆவியார் தாமே இதை விசுவாசித்துக் கண்டு மகிழ, அமைதியாயிருக்கவும் கற்பிப்பாராக, இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.