வேடதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில

ஒவ்வொருவரும் வெவ்வேறாக விவரிக்கின்றனர்

செய்தி வாசிப்பாளர்கள் இடைவிடாமல் உலக நிகழ்வுகளையும், வானிலையையும் அறிவிப்பதைப் பார்த்துப்பார்த்து எல்லோருமே விரைவில் அரசியல், மற்றும் வானிலையைக் கணிக்கப் பழகி விட்டனர். அதிலொன்றும் தவறில்லை தான், என்றாலும் தனிப்பட்ட நிலையில் தன்னை நாடி வருவது இரக்கமா, அல்லது தண்டனையா என உணராதிருப்பதே அவலம் என சுட்டிக் காட்டப் படுகிறது: “பின்பு இயேசு மக்களை நோக்கி, ‘மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. வேடதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?’” என்றார். (லூக்கா 12:54-56) நொடிப்பொழுதில் விரைந்து மறைகின்ற இயற்கையைத் துல்லியமாய்க் கணிக்க முயலும் நாம், நம்முள்ளிருந்து நம்மை எச்சரித்துக்கொண்டே இருக்கும் மனச்சான்றின் குரலைக் கவனிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைத் தெளிவாக வழி நடத்த--கவனம், காத்திரு, கேள், போகலாம் என்றெல்லாம் மெதுவாகப் பேசும் தெளிவான மனச்சான்றுக்கு செவிமடுக்கப் பழகுவோமாக.

 

அப்பா, எங்களை எதிர் கொள்ளும் காலத்தின் தன்மையை உணர அழைப்பதற்காக நன்றி. உம் ஆவியார் தாமே நல்ல மனச்சான்றின் எச்சரிப்பின் சப்தத்தைக் கேட்டு நடக்கக் கற்றுத்தந்து, வழி நடத்துவாயாக, ஆமென்.